03. திருஅண்டப் பகுதி – Thiru andappahuthi

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்                                           6

The spheres that form the universe are numerous. Their nature cannot be measured and is impossible to describe their beauty. It will stretch to hundreds of millions of descriptions. They seem like the dust particles floating in the ray of the Sun that entered the house through a small hole, when compared to the creator who is so Big.

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்                              12

He is the creator and destroyer of all other Gods of creation and destruction. He is the one responsible for the end and the beginning that follows. He is unseen like a storm that sweeps away the small and the large.

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன், கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள், திருத்தகும்                                           16

He is the one, who creates the creator (Brahma), and preserver of the God who preserves things created (Thirumal) and Destroyer of the God of Destruction (Rudra). He is the one who stands aside and ignores all these actions.

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும்                            19

He enlightens those belonging to the other six religious sects to attain redemption. He stands tall above other religious Gods.

அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன், பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோன், நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று
எனைப் பல கோடி எனைப் பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று        28

He is the one who gave the brightness to the Sun and the coolness to the moon. He gave heat to the fire. He placed all these in the unchanging sky. Gave energy to the wind and sweetness to water. Gave firmness to the ground. Likewise He gave the vast number of other objects their many different qualities.

முன்னோன் காண்க, முழுதோன் காண்க
தன்நேர் இல்லோன் தானே காண்க
ஏனத்து நல் எயிறு அணிந்தோன் காண்க
கானம் புலியுரி அரையோன் காண்க                                       32

He is the beginning, Everything is part of Him, He is unmatched. He wears the tusk of the wild boar and the skin of the tiger.

நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க              36

He wears the holy ash. Every time I think of Him I am unable to bear the pleasure. Therefore I cannot ever forget Him. I will die the moment I forget Him. He is the music I hear from a Veena. He understands the essence of everything.

பரமன் காண்க, பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க, அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க                                 40

He is seen as the Supreme and as ancient. His largeness is beyond the ability of Brahma and Thirumaal to find His beginning and the end. He is a wonder, He represents many, His antiquity is beyond words.

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க                             45

He dwells in a place beyond imagination. He only falls for the piety of His devotees. He remains as, “One and the only One!” He extends to fill this universe. He is powerful like a minute atom.

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க                                         50

He is the God without equal; He is the rarest among the rare; Blends with everything and grows them great; He is subtle who cannot be explained by reason; He is present above, below and has spread everywhere.

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க                                                55

He has no beginning and no end; He creates the bonds and also severs them to attain bliss; Takes the form of animate and inanimate objects; He creates the aeons and finds their ends. He is the God everybody can reach.

தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க                                  60

He is the Sivan even the Devas do not know; He appears as male, female and of no sex; I have seen Him with my own eyes; He was oozing ambrosia like graces; I have seen the glory of His mercy.

புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க                                                     65

I saw Him planting His Red coloured feet on this earth and recognised Him as Sivan; He then gave His blessings and redeemed me; He had His consort whose eyes are like lotus flowers as part of Him and thus I saw Her and Him together.

பரமா னந்தப் பழம் கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய                                            70

That was indeed like a sea of supreme bliss! He appeared as a dark cloud and climbed the mountain in Perunthurai while lightening spread from all directions and the snake like five sensory bondages were severed.

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட                                                    75

Sorrows that cause sufferings like summer heat disappeared. The beautiful light was shone. The sound of drums swelled like growing wrath and the Kaanthal flowers appeared as if paying homage.

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன                                   82

The drops of sweet grace that do not diminish appeared. The flood of reddish light appeared in every direction. Like the deer whose thirst was not satisfied by the mirage, so were those in the various sects who trusted the ghost-car.

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து                                 87

From the heavenly river poured God’s graces. Our bondage was broken by His grace and all the results of the good and bad deeds of the past fell like two trees

உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில்
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க                                    95

His unceasing grace flowed and formed a fountain in the heart. It was like a fountain which was full of honey bearing fragrant flowers, which had rising mist around the edge with bees among the flowers. Long live the God who had given worship as a field, love as seeds, and the devotees as farmers in order to attain bliss. Long live His feet.

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க                                    100

Long live the one who wears the snake with black hood on His waist; Long live the primary god who blesses the saints. Long live the God who removed our fears; Long live the one who redeems us daily; Long live the one who wipes away the engulfing dark grievances.

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க                                      105

Long live the One who gives bliss to His devotees. Long live the dancer in the dark. Long live the lover of the woman whose shoulders are smooth like bamboo. Long live the one who is distant to non-believers. Long live the one who is like a depository to those who love him.

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச்                                                                                     110

Praise be to the one who makes the snake dance; Praise be to the one who made me crazy over Him; Praise be to the one who appears with ash smeared body. He is the one who causes the walking to walk, the standing to stand, lying to lie from all four directions.

சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை                                            116

He is ancient beyond words; One who cannot be felt by our senses; One who cannot be seen by the eye; Devised the five elements including the sky. He is merged with all like the fragrance of a flower.

இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி                                     121

He blessed me today by showing His presence and made me realise that this body does not last forever. Praise be to Him who came before me in his simple form. Praise be to Him who created this body. Praise be to Him who is residing in my heart and gives me pleasure.

ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத்                                    125

I cannot endure this body that does not bear the pleasure of His blessings. He shines like the glitter of the gem stones and the gleam of the gold.

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்                        130

He hid himself from various people who searched for Him in various directions, He also hid himself from those who searched for Him with mystic help; He did not appear to those who performed penance. He hid himself from those who were experts on religious knowledge.

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின்                          135

He hid Himself by the same device which some thought they could use to see Him. He hid from even those who had shown love towards Him. He appeared as a male, then as of no gender and then hid himself as a female with a sword shaped brow.

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்                                                 141

He hid him-self from the sages who have gone to the top of the mountains to meditate after renouncing all the pleasures derived from the five senses. He hid him-self from those who said He existed and those who denied His presence; from those who knew Him long and those who knew Him just today. But I saw the One who attracted devotees towards Him.

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தனை இடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்                            145

He hid himself totally from those who said, “Rejoice! Rejoice! Bind His feet with garlands, Go and gather round Him! Follow Him, Do not let Him go! Grab Him!”

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு                                    150

He is without equal. He told people like me about His oneness with everything. Thus He called me and bestowed His grace. He then blessed me by appearing as a sage. This extreme kindness made my bones melt which made me howl with pleasure.

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்                           154

Like the rise and fall of the waves in the sea I too rejoiced. I fell on the ground with my head unbalanced. I fainted, then I shouted like a mad man. This made some scared and others to wonder.

கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல்தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்                                         161

I wandered around like an elephant in rut, without its Mahout! He made my body parts sweet like honey. He made our bondage burn to ashes like He burnt the three cities of His enemies with His beautiful smile. He then took me within His sphere of grace.

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்                                                     167

I do not know how to say what I felt when He came near me like a Nelli fruit in my palm. Is it fair that I should live? I am dog like, I will not live. I do not know understand what He had done to me. I lost all senses. I do not know what blessings He had given me. I am unable to take all in.

செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய                    173

Like the rising waves in the Sea of Milk, He created waves of pleasure in my mind. He filled my hair follicles and every fibre of my muscles with pleasure. He entered this dog’s body and filled every pore with honey like pleasure.

அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது
உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய                              177

He filled my bones with ambrosia. Like a body that was designed by a loving person, He created my body too, as a figure filled with His grace.

கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே                                    182

At last He made me like an elephant that feeds on sweet sugar cane. He bestowed on me His honey of kindness mixed with His grace and made me like the food of Devas. He is the one whose ends could not be found either by Thirumal or Brahman

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s