06. நீத்தல் விண்ணப்பம் – Neeththal Vinnappam

பற்றினைத் துறத்தல் – Pleading for  renunciation

கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.                  (1)

Oh the rider of the bull! Because of your kindness towards this evil person, you have granted me your benevolence. Are you now giving up on me? Oh the one who wears tiger’s skin! Oh the King of Uttara-kosa-mankai! Oh the one with matted hair! I have become weak. Please support me, my Lord!

கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே.                           (2)

Oh the King of Uttara-kosa-mankai! Though I had not given up on the beautiful maidens who had tight bosoms and reddish lips, would you give up on me? I still remain as one of your followers. I have not deserted you. Though I was hiding from you like a thief, what made you to find me and redeem me?

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.                              (3)

Oh the dweller of Thiruvaarur! The king of Uttara-Kosa-Mankai! The one whose half is the one whose breasts are adorned with jewels. The one who nourishes me! I am like a tree on the banks of a river, impermanent due to my constant seeking of pleasure among the black eyed beauties. Would that make you give up on me?

வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே.               (4)

Oh the King of Uttara Kosa Mangai, the one who wears the crescent moon on his long hair! The one with a body that glistens like gold! Though you received me as your devotee by your kind grace, I moved away from you to enjoy my life. Would you give up on me for that?

செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின் மொழியாரில் பன்னாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.                            (5)

Oh the King of Uttara-Kosa-Mangai with flowers adorned hair which are buzzed by bees which drink the nectar from the flowers! Like moths which are attracted by the fire and fall on it, I am attracted by the sweet talk of women and fall for them. I refused to follow the proper path and accept your grace. Would you give up on me for this behaviour?

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே.             (6)

Oh the King of Uttara-Kosa-Mankai! In the past I have refused your kind mercy due to my ignorance, my precious Gem! Please pardon my sins and grant me salvation. Is it not proper for the great to pardon the lies of small dogs like me? Please do not hate me and give up on me.

பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே.                                       (7)

Oh the King of Uttara-Kosa Mankai, the one with the blackened throat due to the poison you swallowed! My Sivan! The true God that treats this liar as worthy and gives salvation. The one who gets rid of the sins of this lowly life. Would you give up on me?

தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே.                  (8)

Oh the King of Uttara Kosa-Mankai who rides a bull adorned with bells and the sound it makes creates terror among the enemies! I fret as to how your grace could rid me of my sins. I am being pulled between the desires of my senses and the fear of committing such sins. Would that make you give up on me?

இருதலைக்கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே.                         (9)

Oh the King of the three worlds! The King of Uttara-Kosa-Mankai! Oh Lord carrying the three pointed spear in your right hand! This fool with unkempt hair who left your feet is like an ant on a stick caught between fires at both ends. Would you give up on me?

பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே.                      (10)

Oh the King of Uttara Kosa Mankai surrounded by groves of flowering tree filled with the sound of buzzing bees! Oh the Lord who destroyed the Muppuram with your strong bow! I had the chance to accept your glorious feet into my heart, yet I let my body wander as it pleased and as a result became weak. Would you give up on me because of it?

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே.                           (11)

My five senses betrayed me and made me to distance myself from your flowery feet. Oh the King of Uttara Kosa Mankai whose thoughts ooze in my mind like honey! The Lord whose golden body glows while being covered with holy ash. Would you give up on me?

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே.             (12)

Oh the King of Uttara Kosa Mankai who carries the spear that frightens the enemies! While you offered me salvation, I rejected it because I was drawn by the pleasures of the senses. You are the sea of nectar from which this ruffian receives a little. Would you give up on me?

கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே.                              (13)

Oh the King of Uttara Kosa Mankai who resides in the body of devotees! Oh the nectar that fills the flowers, the precious gem, the ambrosia, the flood that intoxicates! Like a dog that laps on the surface of a sea, I too am unable to immerse myself in your sea of kindness. Would you give up on me?

வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே                                  (14)

Oh the King of Uttara Kosa Mankai! You fill the hearts of those devotees who love you! Like someone who is unable to quench his thirst while being immersed in a flood, I too am unable to escape this misery, though I have your grace. Please offer this thief the pleasure of your grace that I have not felt before. Would you give up on me?

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
எளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே.                       (15)

Oh the King of Uttara Kosa Mankai! It is your feet that give brightness to true lights! My father! My Lord! The one who owns me! Though I saw your feet with happiness, I have not tried to come out of my sinful life. Are you trying to give up on me?

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே.      (16)

I wandered without anybody to tell me not to be afraid. You are like a flash of lightening! If I have to compare you, there is no one else but you! Oh the Ruler of Uttara-Kosa-Mankai, You can be compared to my mother, to my father, my precious possession. Would you give up on me?

பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வர்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே.                                    (17)

Oh the Truth! My refuge! Terror to those who denigrate you! Your grace is the food that sustains your devotees. You are the light and the darkness in people’s lives. The One who lives both in this world and the other. Oh the Ruler of Uttara-Kosa-Mankai full of beautiful gardens. Would you give up on me?

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய்
அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.                           (18)

Oh the King of Uttara-Kosa-Mankai! The one who drank the poison as if it was nectar!. You are the cure for those who suffer the disease of life. I have come to you as your guest. Take me as your servant, sell me or pawn me. Please do something but do not give up on me.

மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும்
விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர்
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. (19)

Oh the King of Uttara-Kosa-Mankai who scared the mother Goddess by skinning a large mountainous elephant. Take me unto yourself by uprooting my whole life with its roots. Please burn my forest of sins by your kindly grace. Please do not give up on me.

கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே.                          (20)

Oh the King of Uttara Kosa Mankai! You dwell in a place so high that eveb the Devas cannot reach you. You are the one who takes the forms of the earth, fire, water, wind and ether. I am despairing like a vine seeking a support to climb. Oh my gem, would you give up on this whimpering man?

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே.                   (21)

I am tossed around by my sensory pleasures like a small shrub caught in the middle of a vigorous tussle between elephants. Oh my Light, You give me the taste of honey, milk, sugar cane juice and nectar by residing in my heart thus making my bones and muscles melt.

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே.    (22)

Oh the beacon of light! Your body glows bright by the holy ash you smear on your body. You stay close to your true devotees. You remain distant and difficult to comprehend by others. You who have a female aspect, male aspect and sexless aspect., would you give up on me?

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே.                     (23)

Oh Lord, You are the only one there is for me! I have used what you gave me only to increase my bad deeds and reduce my love for you. If you give up on me, I will be ruined. There is no one to support me. I exist in the belief that you will not give up on me.

உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே.    (24)

Oh the Lord wearing the skin of an elephant that had a large trunk! I am prevented from coming to you by my sensory pleasures that have surrounded me like ants besieging a pot of gee. While there are good deeds to be performed, I keep on doing evil. Would you give up on me?

எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே.                                       (25)

Oh Lord who gives salvation to those devotees who always think of your flowery feet that subdued the Lord of Death. Oh you, the Lord from whom the devotees never depart. I am nibbled by the need for the sensory pleasures, like a worm being chewed on all sides by a group of ants. Would you give up on me?

பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே.                            (26)

Oh Lord who wears a bright white crescent moon shaped like a boat bobbing on the flooding waters of the river Ganges! Oh my gem! I am like a fish struggling for its breath when the water in which it lived runs out. Would you give up on this scared soul?

கொழுமணிஏர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து
அழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே.                  (27)

Oh my faultless gem! You have placed me among your devotees who cry and tremble for your love. Please show me your golden feet. Would you give up on me because I had been falling among the hill like bosoms of women with bright white smile.

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்து இங்குஓர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே
துலங்குகின்றேன் அடி யேன் உடையாய்என் தொழுகுலமே.                      (28)

Oh my Lord! The kind one! My master! You drank the poison from the milky sea in order to save those scared beings of heaven and earth. I have been confused by my sensory desires and had taken the wrong path. Would you give up on me for my weakness?

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்றச் சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின்மின்னுகொன்றை
அலங்கல் அந் தாமரை மேனிஅப் பாஒப்பி லாதவனே
மலங்கள் ஐந் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே.                               (29)

Oh Lord wearing Konrai flowers that glitter like gold! The one whose body is beautiful like a lotus flower! My father, the incomparable one! Like curd that is being churned, I am being churned by my five senses. Oh my lord, you rid me of my caste and my sins. You, the one who used the mighty mountain as a bow. Would you give up on me?

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண்டாய் வெண்டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்
தத்தறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே.                                    (30)

My Lord, the one who wears garlands of white skulls, flowers, intestines and bowels, who covers his body with holy ash and reddish sandal paste! I am being churned like curd by my worldly desires. I am like a seed that had been sown for the next life. Would you give up on me?

சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே.                                         (31)

Oh the true one! You take the various forms as water, sky, air, earth, and fire. You transform into the various colours such as white, black and green. You wear the hooded serpent on your waist, the one who defeated the large legged elephant. Would you give up on me?

அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழலக்
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே.                           (32)

Oh my Lord, the one who cannot be approached except by His true devotees! The shining gem! You swallowed the poison that rose from the sea like a fire and thus rendered your throat dark in colour! You saved me from losing myself by my fear of my worldly senses as if they were killer elephants. Are you giving up on me now?

கண்டது செய்து கருணை மட்டுப்பரு கிக்களித்து
மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள்
பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்து என்னைக்
கொண்டென் எந்தாய் களையாய் களையாய குதுகுதுப்பே.                   (33)

Oh my Lord! I was drunk with happiness by receiving your grace and behaved in an unruly manner. Would you call me to serve you as before by offering me your flower like feet, my father! Please get rid of my besotted state. Please do not give up on me but take me unto your feet.

குதுகுதுப்பின்றி நின்று என்குறிப்பேசெய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.                             (34)

Oh Lord of Kailai mountain! I remained without any enthusiasm for your grace and did whatever I wished to do. My heart is soft like that of a banana fruit. When are you going to show me your presence which intoxicates me like liquor? Please do not give up on me.

பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெருமான் வினையேன் மனம்அஞ்சிப் பொதும்புறவே.             (35)

Oh the king of heaven who likes to place me too, among his olden true devotees! You wear the moon with a hare’s shadow on it, along with the serpent on your body. This sinner is attacked by his five senses like being attacked by a five headed serpent. Is it to scare me away from you? Would you give up on me?

பொதும்புறு தீப்போல் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே.                     (36)

Oh Lord, the king of heaven! The bees buzz different tunes while immersing themselves in the honey that drips from the flowers found on your crown of hair! My sensory feelings had been smouldering within myself like a smoky fire that burns in a bush. Would you give up on me?

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந்து அடர்வனவே.                (37)

Oh the King with golden feet with snakes as adornments, who married the damsel with white smile and dark eyes! My past sins are jointly attacking me with mountainous force. For the mistakes I have committed, shouldn’t you have said not to be afraid? Instead would you give up on me?

அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாய் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே.                            (38)

Oh the Lord! You are like glow of a spreading fire! King of the cremation ground! Nectar to the devotees! The saviour who removes my loneliness! I had been away from you attracted by the sweet talks of the women in whose pleasures I had immersed myself. Would you give up on me?

தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய
மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே.       (39)

Oh my Lord, you are this sinner’s moral support, my life’s investment, my life’s savings! I am unable to bear the sufferings of this life, caught in the net of births and deaths. You remained my only support while I behaved in a wayward manner helped by my past sins. Would you give up on me?

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்து அலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும்
மலைத்தலை வாமலை யாள்மணவாள என் வாழ்முதலே.                     (40)

Oh my Lord, the one wearing the crescent moon on your hair, the one who is kind, head of mount Kailash, husband of the maiden of mount, my life’s resource! I had been caught in the net of women whose glances were like those of fawns caught in a hunter’s net. Would you give up on me for that?

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி
விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக்கு ஊன்மிடைந்த
சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே.                     (41)

Oh Lord who has the jewel bosomed maiden as his half! My ultimate hope! I am immersed in the hot water of lust for the crocodiles like red mouthed women and am lost. I cannot bear this diseased body any more. Oh my Sivan! Is it justice? Is it fair? Would you give up on me?

கதியடி யேற்குன் கழல்தந்தருளவும் ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற்
பதியுடை வாள்அரப் பர்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே.                            (42)

Oh my King! You have in your hair, the moon that hides itself in river Ganges, having been scared off by the opening and closing of the hood of the serpent that lives among the white sculls that you wear on your body. Though you have given me the grace of your feet, I am still not free from my sins. Would you give up on me?

மன்னவனே ஒன்று மாறுஅறியாச்சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல்
சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே.                       (43)

Oh my Lord! You the one beyond description, taught us the Vedas and scriptures! You appear in front of your devotees who constantly worship you! You are the universe! You are the light to this ignorant one who does not know how to reach you! Would you give up on me?

முழுதுஅயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள்
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய்வேனை விடேல்உடையாய் உன்னைப் பாடுவனே.               (44)

Oh my Lord! Let me join your devotees who worship your fragrant feet. I pray, please do not leave behind this poor soul who keeps erring repeatedly. Oh my master, I will sing your praises. I melt like butter in the midst of a fire with burning lust for women whose eyes are shaped like sharp spears. Would you give up on me?

பாடிற்றிலேன் பணியேன் மணிநீஒளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியந் தாங்கலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான்எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே.                              (45)

Oh my Lord! I do not sing your praises, I did not offer my services to you with humility. My heart had not broken when I heard that you have gone hiding from me. I had not wailed in search of you! I did not call for you nor run around asking as to whether there was anybody who had seen you. I had not melted inside but just continued to live. Would you give up on me?

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே.                             (46)

Oh my Lord! Would you give up on me because I had been attracted to the bosoms of women like flies to a jack-fruit? If you did, then I will disgrace you by calling you the dark throated one who drank poison , that you are human ( maanidan – one with the deer on the left side / human), one with low intelligence (theiy mathiyan – one with a half moon / reduced intelligence), an old beggar and so on.

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்
கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே.                                      (47)

Oh my Lord! You have a moon, shaped like a boat that carries beautiful white pearls, conch shells and flowers in the floods of Ganges which is trapped in your hair! I ridiculed the devotees who fell at your faultless feet and remained unrepentant. Would you give up on me for that?

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழல்அரப்பூண்
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடில்என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தரகோச மங்கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச் சிரிப்பிப்பனே.                                         (48)

You are the brave one who have skulls worn like stars on your head and serpents as garlands. Would you give up on me? If you did, when those who meet me and ask me as to whose devotee I was, then I would tell them that I was a devotee of the king of Uththara-Kosa-Mangai and thus make them laugh at you.

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சு ஊண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்றேசுவனே.               (49)

Oh Lord! I laugh at myself for this pathetic existence. I declare to submit my services of to my Easan! If you give up on me, then I will ridicule you as one wearing the skin of the elephant, the deluded one who takes poison for food, the clown who dances carrying fire at the burning ground, a fool who took me as his devotee.

ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.                          (50)

Oh my Lord, the one who has the glowing brightness of a mount of marble, the one whose slave I am. Because of your kindness towards the rest of the living things, you swallowed the poison while the celestials took the nectar! Whether I praised you or spoke ill of you, my body melts for the mistakes I have made. Would you now give up on me?

திருச்சிற்றம்பலம்