05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே.                                          (1)

You have placed me, a liar on this earth so that lies would have a seed here. All those dear to you have arrived at your feet. I continue to immerse myself in fear of living. Oh Lord of Thiruvaarur who had once taken the form of a mendicant! Please tell me, what have I done to deserve this?

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.                                          (2)

I was spoken of as your devotee by those who loved you. I was smeared with holy ash by your devotees of holy men. I was also abused by others. I am unable to bear this any more. I am your slave, so please take me under your realm.

அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ
அடியர் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.                          (3)

Am I not your slave and didn’t you grant me a place in your sphere of grace. All your true devotees have reached your feet. Oh my Lord of Sivalokam! I do not know how I can get rid of this body so that I can come and see you till my eyes feel tired.

காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே.       (4)

Oh the glowing fire! Oh the one who does not identify himself either as male or female! Oh the ambrosia! Though I saw you the other day, I failed to see you in the proper manner. I lowered myself by my own words. Now I am lying like a dead body. I am like a dog without the will and the resolve to rise up. What means shall I use to redeem myself, Oh God?

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.                      (5)

Oh my Lord, who has the fawn eyed maiden as your half! You are beyond the understanding of the scriptures. Oh the honey! The Nectar! You, the one beyond imagination! You, the King who pardons my errors! I have spoken a few words ill of you because your true devotees have entered your kingdom while I and the lies that I speak are left outside.

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே.                         (6)

Oh Lord! The devotees who knew nothing else but who had total belief in you have followed the path of merit and have arrived at your feet. I and my lies have been cast aside. I am incapable of showing my true love for you. Therefore I am unable to receive your blessings.

தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.                              (7)

Oh my Master! Please grant me the ability to love your feet. Your true devotees have attained salvation while I stayed behind. I am like a blind cow that eats anything while the others in the herd eat grass. I weep seeking the love of your feet though I am not fit to receive it.

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே.                       (8)

I do not cry in devotion towards you like those devotees who melt like wax that is thrown on to the fire, nor did I join those devotees who followed your bright glowing feet. I was born without any merit. What ways shall I use to worship you?

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.           (9)

Oh Lord, you offered your blessings and removed the maladies of your devotees and offered them the blessings of your feet. If that is not possible with me, then please destroy the sins of this soul whose heart is like a hardened bamboo shoot and offer me the blessings of your cool feet.

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.                           (10)

Oh sweet honey, The nectar, Juice of Sugar cane, Sweet one! I am false, my mind is false, my devotion is false. But if I cry with devotion, I will be able to reach you. Please grant me your blessings so that I can reach you and attain bliss.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s