05 – (6). திருச்சதகம் – அநுபோக சுத்தி – Purity of Experience.

ஈசனேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.                                   (1)

Oh Lord! My leader, my father, the great one, the one who can destroy my life! I am nothing but the worst kind of a dog! You have offered me refuge but I do not think of you. Oh the bright light! The ruler of the universe! I do not know what I can do to redeem myself.

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கு இருப்ப தானேன் போரேறே.            (2)

Oh the mighty winner of wars! I am like a lowly dog that does not know what could be done. I deserve to be treated like a deceitful devotee who is yet to see your flowery feet. Though I have seen and heard your true devotees attaining their goal of reaching your flowery feet, I still remain a burden on this earth by just eating and clothing myself.

போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியர் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனா கொடியான் உயிர்தான் உலவாதே.                 (3)

Oh the winner of wars! You with your soft breasted maiden left your golden city to come down and remove the darkness from the minds of your devotees who were then able to reach your feet. Even after seeing this, I am like a blind pig still suffering with desires of life. When will this sinner stop drifting around?

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங்கு உனைக் காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே.                 (4)

Oh my glittering gem! There are many holy men whose bodies become wasted by carrying out penance for a long period, in order to reach you. While they thus suffered, you took me as your slave ignoring them. But I am unable to get rid of this foul body nor do I think of you with piety. How can I raise myself from this state.

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.                  (5)

Oh my Lord with Umaiyal as one half of the body! You honey, you nectar, you sweet juice! Lord Sivan! King of South Thillai! When those who constantly had you in their thoughts were able to reach you, still I dwell protecting this body of flesh which is only a bag of worms. How can I reach your feet? Oh my Master!

உடையா னேநின்றனைஉள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங்கு ஊர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.                  (6)

Oh my Master! I have seen your true devotees whose hearts melt with love for you, attain liberation at your feet. Yet I who is lesser than a dog do not have a heart that melts with love for you. I am like a stone that does not ooze any love for you. You have decreed that I continue to live on this earth to maintain this foul smelling body which is just a bag of worms.

முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் அடியாரைப்
பிடித்த வாறும் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே.          (7)

What you have decreed my life to be is proper. Because I am a cheat attracted by the trembling lips, the sight of the slipping dress and drops of sweat on the face of women. It is correct that you gave salvation to those devotees who had not fallen for such distractions.

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாம்என் தன்மையே.                    (8)

Oh my Master! You make the body of the devotees, who are wise enough to understand the nature of the sweetness and light that you give, melt with love. If I, a rogue tells you that I am your devotee and that you gave me salvation, you will only laugh at me as an object of ridicule. That is the state that I am in.

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.                     (9)

Oh my Leader whose nature cannot be understood by others! Will you take me, this dog like low life unto you and then cast me aside? If so who is going to take pity on me? What will I do then? Oh my Lord! Oh my father with a glowing body! Where shall I take refuge?

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண நீஆண்டருள் அடியேனும்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.                         (10)

Oh my Father! Earlier I stood among the devotees who piously praised thy feet. But I smiled looking at my rounded shoulders and this shameless dog felt happy within himself about their beauty. I did not have the love to seek your blessings. Am I a fit person to receive salvation in this state of mind? No my father! I will not continue to stay here but will try to reach your feet.

திருச்சிற்றம்பலம்