41. அற்புதப்பத்து – Atputhap paththu

(அனுபவம் ஆற்றாமை) – (The Unutterable Experience)

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே           (1)

I was caught up in the sea of life because of my desires and was engulfed in the whirlpool of lust for women. My Lord saved me from my confusion by ridding me of my lies and blessed me and showed me His golden feet and manifested in His true form. I am unable to describe this miracle!

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.          (2)

I had not offered flowers and bowed my head at the feet of my Lord. But He showed me His grace by saving me from the misery of joining women with sandal smeared bosoms. He saved me from such a fate by showing me His gold worn feet. He stood before me as the King so that others could see. I am unable to describe this miracle!

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே.                                (3)

I led a life of lies and pretence on this world and suffered the delusion of importance as me and mine. I roamed around raving and ranting and suffered the effects of my previous vile deeds. I was then held firmly and repeatedly fed sweet truth by the Lord who was beyond the reach of the Vedas. I do not understand such a miracle!

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.            (4)

I was not mindful of the effects of births and deaths on my life and was living uttering lies. I was muddled by the glances of the dark eyed women with flowing black hair. I was saved by the tinkling sound of your anklets while You yourself came down with your consort Goddess Uma and became my companion and gave me salvation. I do not understand such a miracle!

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே.                       (5)

Home comforts, relatives and other wealth along with women gave me pleasure and attracted by these I loafed about enjoying these. In order to get rid of these vile acts, You showed me your flowery feet which made me dance. Then You enslaved me by entering my heart. I do not understand such a miracle!

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.        (6)

Unmindful of the effects of the cycle of births and deaths on me I roamed around like a lunatic immersed in the pleasures that flowed from the lips of women. You my Lord is a sea of nature which has no character or identity arrived with your consort and redeemed and enslaved me. I do not understand such a miracle!

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.              (7)

In this life of mine I had not plucked suitable flowers and offered at His feet chanting the five sacred letters ‘Namasivaya’. Instead I had been attracted by the glances of the dark eyed damsels with well formed bosoms. But my Father showed me His flowery feet and redeemed me and blessed me. I do not understand such a miracle!

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத்து உயர்ந்ததன் பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்துஅடி யார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே.                           (8)

My Lord is beyond the understanding of those who try to reach Him by chanting His name. He removed my swing between my soul and body. He enlightened me and gave light to my conscience. He severed my attachments and with His superior mercy removed my desires and placed me within His devotees. I do not understand such a miracle!

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
இச்ச கத்துஅரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.             (9)

I was living a fake life like a worm infested dog doing whatever the women desired in order to please them. My Lord showed me His flowery feet, which was unattainable to Lords Vishnu and Brahma and redeemed me and ruled me. I do not understand such a miracle!

செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.               (10)

I was enjoying the pleasures of the women with fish like eyes and flowing tresses without considering the effects they had on my cycle of births and deaths. My God, my Leader showed me His flowery feet of boundless beauty, gave me wisdom, redeemed me and ruled me. I do not understand such a miracle!

திருச்சிற்றம்பலம்