40. குலாப் பத்து – Kulaap paththu

அனுபவம் இடையீடு படாமை – Uninterupted experience

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                   (1)

I deemed that only the begging bowl and the loin cloth belonged to me. It became clear to me that the object I should seek with my melting heart was the feet of Lord Siva. I reached Thillai dancing with my bent body and soul because of the Lord ruling in Thillai.

துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.              (2)

I have no death or birth even if I commit more sins by lusting for soft shoulders of the sweet talking damsels with narrow waists in the shape of drums because I have been accepted as His devotee by the Lord ruling in Thillai.

என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                 (3)

My Lord entered my bones and melted them and removed the effects of my past good and bad actions. My sufferings were removed and my attachments were purified and my previous sins were removed by the mercy of the Lord ruling in Thillai!

குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                   (4)

You are the One who do not part from the minds of those who have themselves parted from groups of people without any goal, virtue or good character. You are the ambrosia like source that gives pleasure to the mind. I hold fast to the Lord ruling in Thillai!

பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                      (5)

The Lord has removed from my life the divisions bound by name and character. He made all the devotees gather together and fulfil them by imbibing the honey of His mercy. I hold fast to the Lord ruling in Thillai!

கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே
நம்பும்மென் சிந்தை நணுகுஎம்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                (6)

The bud that forms on a bough becomes a flower, then an unripe fruit, then a fruit and finally rots and falls. I believe that the Lord whom I do believe in, will not let such fate befall to my body. Thus I hold fast to the Lord ruling in Thillai!

மதிக்குந் திறலுடைய வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்கு
அதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                (7)

The feet that pressed and crushed the shoulders of the renowned Asura named Ravana sits on top of my head. Therefore I rejoice of being relieved from the pull of Pasu and Paasam. Thus I hold fast to the Lord ruling in Thillai!

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                   (8)

Because your sacred feet, those which walked behind the black wild boar in the forest had been placed on my head, I was able to subdue and overcome the lure of my five senses. Thus I hold fast to the Lord ruling in Thillai!

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                     (9)

I was like one who had been tilling a barren land and not getting any yield. Because of the penance I had performed before I was redeemed and was able to be of service to my Lord. Thus I hold fast to the Lord ruling in Thillai!

கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.                       (10)

He has given His half to His consort who has well formed and fragrant daubed bosoms. I serve Him with a sincere mind. He is like a mother who has rid me of my sins accrued in this life. Thus I hold fast to the Lord ruling in Thillai!

திருச்சிற்றம்பலம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s