38. திருவேசறவு – Thiruvesaravu

சுட்டறிவு ஒழித்தல் – Sacred Sadness

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே.                              (1)

O God! The One who wears the waves filled river Ganga in His hair! You drew this iron willed man towards You again and again and made my bones melt with love and showed me your feet and made me feel as if I was tasting sugar-cane! It was your grace towards me that transformed all the foxes into horses earlier!

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே.                                   (2)

O Lord who has given his half to his consort whose words is melodious! You are like ambrosia to your devotees. You are my master! You blessed me by severing my attachments of birth on this earth. You called me to come to You and I was redeemed on seeing your anklets worn feet!

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆவாவென்று
ஓதமலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே.                                       (3)

O Lord! The One who swallowed the poison formed in the milky ocean! I was one without any support! I was about to sink in the hell without anyone to worry about it. You showed me your flowery feet and thus saved me from my fate. What shall I say about your kindness my Lord?

பச்சைத்தாள் அரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே.                             (4)

O the Lord who makes the moist tongued serpent to dance! The One with the spreading hair! Lord of those who worship your flowery feet! You elevated me from praising the minor gods! It is your glory that fills my mind. My thoughts are all about your greatness!

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிருமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.                          (5)

O Lord! I am not one who has learnt the arts or the spiritual books! I have not melted and wept with devotion. Yet I do not know any Gods other than You! Because of your grace I arrived at your feet and remained egoistic. O my Lord! Is that not like giving a dog a golden seat? O my Golden grace!

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென்று ஆண்டவா றன்றேஅம் பலத்தமுதே.                           (6)

O my Lord! My Master! The Nectar of Ambalam at Thillai! I was troubled by the glances of damsels whose feet were soft like cotton. I trembled as if I had taken poison. I was saved by your grace. It was You my Lord who redeemed me by saying, “ Fear not”.

என்பாலைப் பிறப்பறுத்து இங்கு இமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
என்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே.                                     (7)

O my Lord! The one who is beyond the understanding of even the celestials. O Siva, dwelling in Perunthurai in the south! You have severed my cycle of birth and entered my heart because of the love You have for me and ruled me. O Lord, I do not understand as to why you have done all this to me!

மூத்தானே மூவாத முதலனே முடிவில்லா
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே.                                         (8)

O Lord! The Oldest One! The Ageless Primal One! The limitless wisdom and its meaning! You are real to the believers and unreal to the unbelievers! You have lifted me from the earthly sufferings and because of your mercy have redeemed me. O Lord!

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவுஆமாறு
அருளெனக்கிங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே.                 (9)

O Lord having Idaimaruthur as your choice of dwelling! I had your fragrant flowery feet growing in my mind which melted my heart and made me to wander onto the streets and praise you by shouting your name “Sivaperumane”. I then drank your merciful blessings. Please grant me your grace to immerse myself in your see of mercy.

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.                      (10)

Lord Siva who pleases like honey and nectar came to me by Himself and entered my mind and blessed me to hate and give up my life of bodily pleasures. I received from Him the sacred word “Sivayanama”. Have I performed any penance to receive it? No! It was also due to His mercy.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s