36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam

சிவானந்த விளைவு – Pleasure of Divine event

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறியாது என்றன் உள்ளமதே                        (1)

Our Lord! He has the daughter of the mountain chief as His half. He is like nectar to the people of Pandya land. He is unique. He is one with no possessions. He came on a stallion for me so that I could melt and pray at His feet. My heart does not know any other form except His.

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே                             (2)

Our Lord is so bright that the Sun is shadowed. He severed the rebirth of the King of Madurai. If He comes and joins us with His trident in His hand riding His stallion, then our cycle of birth will be ended. All those who are attached to Him will be enlightened forgetting their past vices. I can emphasise this with a drum beat.

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே                   (3)

If you wish to immerse yourself in joyful bliss then follow what I say. The One to whom this Pandi land belongs mounted His stallion and came down on this earth and entered the hearts of devotees and ruled them so that they could attain bliss. Go and pray at the feet of God who Himself is the joyful bliss.

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம் எக் காலத்துள்ளும்
அறிவுஒண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே                                  (4)

O the good souls living in Pandi land! Do not go doing things that cause you to be born again and again. This is the period when our God, this Southerner, God of the good land Pandi, mounts His stallion of joyfulness, and draws His sword of knowledge and grants grace to confront the cycle of births of His devotees.

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே                         (5)

While you have time, achieve liberation by showing love towards our God. He is the God of the Pandi land, the one who consumed the Alahala poison in order to save Thirumal who ate the earth, the four faced Brahma and other celestials. He is offering grace to His devotees to attain redemption. Come and take your turn in front.

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே.                          (6)

Even the Pandyan King is not capable of describing the grace of our God who increased the light of understanding so that the darkness of ignorance is removed and everything else is revealed clearly. Your opportunity to love Him is available whenever you seek it. Deliverance is the prize that the God of Pandi land offers for your love.

மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே               (7)

He rides the horse of illusion and once He enslaves us then our enemies which are the birth cycles will be rid of. He, the Southerner, the munificent one, enters our mind and offers His grace as His prize to all those who have reached His feet that gives redemption.

அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்து இடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே                (8)

Our Lord, the keeper of the Pandy land immersed me in the never ending flood of joyful bliss, showed me His full grace, rid me of my sins and removed my old bondages. If we ask, it is in His capability to give us the world as his gift. So please hurry and take your place in front.

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திக் கொளப் பட்ட பூங்கொடியார்
மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே          (9)

People go through births because of their sins of the past. The king of Pandi land came down on His steed to help those devotees whose bones melt with their love for Him to cross this sea of birth. When some damsels who were like flowery creepers saw Him, they stood like trees forgetting all about themselves.

கூற்றைவென் றாங்குஐவர் கோக்களையும் வென்றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல் ஒற்றைச் சேவகனே
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே                               (10)

Our God is one who has conquered death and He is beyond the control of the five senses. He remained in glory with His consort and arrived for the king whose emblem was fish and got rid of his enemies. Those of you who are still not clear in your thoughts go and quickly submit yourself at His feet.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s