34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu

சிவானந்த மேலிடுதல் – Submission of the soul

பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம்அ தாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.                      (1)

O God, You who have as your half Goddess Uma whose underbelly is beautiful like that of a hooded snake! You, the destroyer of evils have stayed with me every day. O the rider of the bull! You dwell in Perumthurai which is praised in songs by learned poets. O the sweetness! On what days can I rejoice or swell with pride?

நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே.                (2)

He is the One with bees buzzing at the crown of His matted hair. He dwells in Perunthurai. Who am I to reach His feet? But He gave me, a dog, the gift so that I could reach His feet. He entered my body, mingled with my soul, did not part from my heart, thereby giving me the riches that even the celestials do not know.

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே.                           (3)

He is beyond the understanding of the mind and beyond description by words. He has the fierce bull as His mount. He is the superior one who dwells in Perunthurai. I was not aware that He made me a mad man thereby I was unable to recognise me as myself and the day becoming night. O the eternal flame!

வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே.      (4)

My Lord who dwells in Perunthurai came and enslaved me. He entered my body and made every pore of my bones to melt. He entered my mind, my vision, my speech. Is there anybody else in this wide world who could get rid of evils? Please tell me if there are any!

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே.                (5)

O those of you, who are on the path to ruin but want to attain salvation, please come running! If you have given up your attachments, but want to attain salvation, then join and mix with the devotees who have placed their faith in worshipping the feet of the Lord of Perunthurai who has a crown of matted hair.

கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே.                  (6)

Here what our Lord who wears the brilliantly bright crescent moon on His crown made up by His flowing hair and who dwells in Perunthurai had done to me. He entered my body and soul and filled my entire self. He then removed the evil thoughts that were coming at me like waves after waves.

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே.              (7)

I do not seek acclaim or riches, earth or heaven, birth or death. I will not touch those who do not seek Lord Sivan. I have now reached the Lord of Perunthurai and am wearing His feet on my head. Now I will neither leave Him nor let anybody take them away from me.

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.                                (8)

O our Aran! O the rarest of Cures! O my King! O the dweller of Perunthurai which is surrounded by muddy fields! O the faultless one with Holy ash covered body! What shall I call You, ‘the honey from the tree branch’ or ‘the Ambrosia from the milky sea’? I am unable to resolve.

எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.                                    (9)

O our Aran! O the rarest of cures! O my ambrosia! O the one with the reddish body like a red flower! The dweller of Perunthurai! You entered my heart and transformed you as myself. I was unaware of this gift You have given me while I know everything else.

வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால் உனை நல்காய் என லாமே.                               (10)

O the One who dwells in Perunthurai filled with honey bearing Konrai flowers! While those in this world with sky above performed penance, I wasted my life carrying this fleshy body and became like a tree in a grove. I have become a sinner but does that prevent me from asking You to give me your grace?

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s