30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathikam

சற்குரு தரிசனம் – Sighting the Guru

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
மான் உன்நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவரும்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                    (1)

O Lord dwelling in peaceful Perunthurai! From those who speak your name, sufferings will be removed and only joy with harmony will ensue. O my Lord! You removed the indestructible seeds of sins that cause an unending cycle of birth and death so that I am saved from such sufferings. After that You came and showed yourself to me in Kazhukkundram!

பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
சழக்க னேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு
நாயி னுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                    (2)

O the mad Lord of Perunthurai who worked as a labourer and carried earth for Pittu as wages! I did not reach You because of my ignorance about the right way to attain you. O my Lord! King of Sivalokam! I am suffering as one worse than a small dog. Still You came and appeared before me in Kazhukkundram!

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி
மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி
மேல் விளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவடிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                     (3)

I was suffering and shedding tears but that was changed and my sins were rid of at Perunthurai. I, the sinner moved away from there. I did not know what the future was holding for me. I wept as I did not have a place in my heart to worship your sacred feet. But you appeared before me without any hesitation at Kazhukkundram!

பூணொ ணாததொர் அன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொ ணாதபெருந் துறைப் பெருந்
தோணி பற்றி உகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே.                                 (4)

O Lord! While your devotees were in extreme love with You and were daily hailing your praises, I was deeply ashamed of all these and immersed myself in the sea of life. Then I got hold of the rare boat,that is Perunthurai and saved me from this sea of misery. Then You appeared and showed me Your splendid form in Kazhukkundram!

கோல மேனிவராக மேகுண
மாம்பெருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்திலாத என்
சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நான் உனை
நச்சி நச்சிட வந்திடும்
காலமேஉனை ஓதநீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                 (5)

O Lord of Golden body! O the Lord of virtues dwelling in Perunthurai! O the One residing in the heart of mine who lacks any good moral values! This world is a witness to the fact that I adored You more and more. While I hailed You, You appeared before me at Kazhukkundram and showed me yourself.

பேதம் இல்லதொர் கற்பளித்த
பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏதமேபல பேச நீஎனை
ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை அற்ற
தனிச்சரண் சரணாம் எனக்
காதலால் உனை ஓதநீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                 (6)

O the flood of mercy dwelling in Perunthurai where I was given the knowledge to rid my conflicting thoughts! What have You done to me that had made strangers speak ill of me? You are the only refuge where there is no death. Because of my love I sang the praises of that refuge and You appeared before me in Kazhukkundram .

இயக்கி மார் அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்மலப்பழ
வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின்
தூய்ம் மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.                                 (7)

O Lord who enslaved the sixty-four Yakshini women to follow the eight divine qualities! You prevented me from immersing into the powerful evils (Val-vinai) caused by the triple filthy deeds (Mum-malam) and enslaved me and showed me your pure flowery feet. You then revealed yourself to me in the presence of Your devotees in Kazhukkundram!

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s