26. அதிசயப்பத்து – Athisaya-paththu

முத்தி இலக்கணம் – Signs of Eternity

வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.     (1)

My heart did not melt thinking of Him as a savings fund or a glow from a diamond but ruined myself by falling among the women with well formed bosoms. But my Father who has incomparable and peerless radiant flowery feet redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏதமே பிறந் திறந்துழல் வேன்தனை என்னடி யானென்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற
ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.            (2)

I do not think as to what is justice or join with those think about it. I go through birth and death wallowing in sin. My supreme Lord who has a woman as His half, who is eternal, has accepted me, as His devotee and made me join His horde of devotees. Thus we witnessed a miracle.

முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி அதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.     (3)

He is my father with three eyes. He is rare to be reached by many but easily accessed by His devotees. He wears a crescent moon on His hair that is shinier than gold. He redeemed me to rid me of the sins of my earlier deeds and made me join His hordes of devotees. Thus we witnessed a miracle.

பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         (4)

Instead of following the means to receive His grace, I intend to die and enter the world of hell. Listen, that is the reason why people of this world call me insane. My father has redeemed me and made me join His hordes of devotees. Thus we witnessed a miracle.

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி ஆடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.        (5)

I do not join with those who praise you and worship you or do not pluck flowers and offer them to you. I ruin my life by staying among the women wearing flowers in their hair. Still my Lord who dances on fire at night, with glowing hair and wearing the snake, redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

எண்ணிலேன் திருநாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற்கு ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.      (6)

I forget to chant His sacred name of five letters because of my poor intelligence. I did not join the group of wise sages. I did not seek to perform good deeds but consent to be born and die on this earth and eventually become one with the earth. But my Lord redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.       (7)

I took this false body that has wall made of flesh with holes that is filled with worms and leaking filth and having a false roof, as real and was caught in the sea of misery. My Lord, who shines like the total brilliance of pearls, rubies, diamonds and precious coral redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         (8)

Earlier He separated me from Himself and made me enter this body. Then He blessed me with a few mystic words and lifted me without any shackles and rid me of my past sins. He made me a rising glow and redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.       (9)

God is like the fragrance rising from a flower. It delights everybody but does not last forever. So instead of placing their faith on Him, some reckon that their body is the most important thing and indulges in the pleasures received. My Father prevented me from placing my trust in these mad men He redeemed me and made me join His devotees. Thus we witnessed a miracle.

இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுஇத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.   (10)

This body was formed in the darkness of ignorance. I was about to fall into hell with delight thinking that this was an object of desire. The Lord of truth, who showed His anger towards evil by destroying the three citadels with fire removed my past sins and redeemed me. Thus we witnessed a miracle.

திருச்சிற்றம்பலம்