21. கோயில் மூத்த திருப்பதிகம் – Koyil mooththa Thirupathikam

அநாதியாகிய சற்காரியம்- Eternal Reality

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.                  (1)

O the Prime Lord without an end, dancer at Ponnambalam! The Goddess who has everything inhabits the centre of your heart and you inhabit the centre of the Goddess’s heart. Because both of you inhabit the centre of my heart, please come forward to grant me, your servant, the grace to take the centre among your devotees fulfilling my heart’s desire.

முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே.                (2)

O the Lord who enjoys dancing in Ponnambalam!   Once before, You came before me and enslaved me. I rendered many services to you in order to gain additional merits and to attain bliss. But my services were inadequate and I was lagging behind. If You do not offer me your grace now and ask me to go with you, will not your devotees ask, “Who is he to our Lord?” and cast me aside.

உகந்தானே அன்புடை அடிமைக் குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே.      (3)

You enjoy the services of your loving devotees. I am the one who do not melt with devotion and if I complain for the world to know, will they not say that this not the propper way to behave? Those sages who performed sacrifices are living with you in bliss. If you do not show me your face, I will perish, O the Prime Lord at Ponnambalam!

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே.                   (4)

O the absolute source! You are the guidance to the five senses, to the Three Lords (Indran Brahma and Vishnu) and me. You have joined your old devotees who have gathered in heaven. What else can I do except to cry and plead with you to show me your mercy and offer me grace, O the King of Ponnambalam!

அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ.                                (5)

O King! O the nectar dancing at Ponnambalam! I call you thus longing for your grace, waiting like a heron that is waiting for its prey. I cried in anguish over days and nights. You have appeared to their delight, in front of your devotees who have reached their goal of attaining bliss. You have not appeared before me but remain silent hidden like ghee in curdled milk. Will the world not disparage you for it?

ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்கும் திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.                       (6)

O the Supreme Lord! O My father who dances at Ponnambalam! Some of your devotees will reproach me while others scorn me that I am one of your devotees. But all that I yearn for is your grace. Please show me your mercy hereafter so that I can see and join the devotees gathered round you in Thiruvolakam and worship with them.

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளாயே.                           (7)

I believed that the Dancer in Ambalam will show me mercy but was disappointed. You then enslaved me by teaching me a rare truth. Will I now become like a bull without an owner? O my Lord! Plese grant me your grace and call me to join your side where You and those devotees close to You, stay, live and play.

அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பர் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ.                       (8)

You are a Gold for deeming me worthy to enter me and enslave me! O the Dancer of Ponnambalam! If you do not show your grace then who is here to tell me not to fear? I suffer staying away from you due to my befuddled mind. If you do not call me to your side and make me join the gathering of your blissful devotees, then I will die. Will not people laugh at you then?

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே.                         (9)

O Lord, those who had been redeemed will laugh, enjoy themselves, pray, gather in groups and describe your sacred name, then praise it, repeat your holy name seated apart , hail you as the leader who dances at Ponnambalam. Is it right that I stay in front of them to be sneered at as if I am a dog.Please grant me your grace.

நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே.                      (10)

O Lord who owns me! I repeated your name many times unconsciously. I poured tears from my eyes, babbled with the words, worshipped You many times and said that You will not leave me without offering me your grace. My heart melted when I thought about You. I wilted when I called the name Ponnambalam. Take pity on this soul that yearns for Your grace and grant me salvation.

திருச்சிற்றம்பலம்