11. திருத்தெள்ளேணம் – – Thiru Thellenum

சிவனோடு அடைவு – (Refuge with Sivan)

(Thellenum was probably a group game played among women while making rhythmic noise by using sticks to strike against or using hands to clap. Poet Manikkavasagar had constructed each verse to reflect this rhythmic style and ending each verse with a request to the women to sing and make the noise by playing Thellenum.)

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                                 (1)

Thirumal took the form of a boar and went in search of the sacred feet of the Lord but failed to find them. In order that we may see them He took the form of a learned sage and appeared before us and enslaved us. Let us hail Him who has neither a name nor a form with thousands of names and play Thellenum!

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                                 (2)

The Lord dwelling in the hallowed temple of Perunthurai severed the roots of my sins which were the cause for my cycle of births and deaths. Now I do not behold anybody else but Him. He is the one with and without any form. Let us play Thellenum and sing the praises of Thiruvarur where He rules.

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குந்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                                (3)

Our Lord Sivan did not appear to Lord Hari, Lord Brahma or any other Devas. But when we said that He would come before us and melt our hearts and accept our services, the whole world laughed at us. Let us sing to their ridicule and play Thellenum.

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                                 (4)

He is the Superior Light that redeemed me from immersing myselves in the futile believes in other gods. Once He had given me enlightenment about our God, the glowing Fire, my belief in my importance was discarded and I became the true devotee of Lord Siva. Let us play Thellenum by singing about it.

அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                                  (5)

Our Lord Sivan who was not accessible to Brahma, Thirumal or any other rare celestials, took a form and arrived on this earth to delight the people. He took pity on me and entered my heart so that my birth cycle was destroyed forever. Let us sing to that gracious One and play Thellenum.

அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாடஉள் ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                                 (6)

The Lord who wears the dancing snake on His waist and who gave up His half to the daughter of the mountain, Goddess Uma came down to this earth to redeem us. When we talk about it or think about it, there are tears in our flower like soft eyes. Let us sing about His glory and play Thellenum.

ஆவா அரிஅயன்இந் திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூதலத்தேவலித் தாண்டு கொண்டான்
பூவார் அடிச்சுவடென் தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                                    (7)

My Lord Sivan who is rare to be seen by Lords Hari, Brahma, Indran and other celestial beings, came down to this earth and called me to Himself and forcibly enslaved me. When He placed His flowery feet on my head I felt heavenly. Let us sing to all these events and play Thellenum.

கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவம் என்றிரண் டச்சந் தவிர்த்தென்னை ஆண்டு கொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவா வண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                             (8)

My Lord made me realise that the cycle of birth and death is like a swirling leaf that goes round and round. Thus He rid me of my fear about sins and virtues and enslaved me. He made me not to forget His anklet worn feet even in my confused state of mind. Let us sing and play Thellenum.

கல்நார் உரித்தென்ன என்னையும் தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று தெள்ளேணங் கொட்டாமோ.                       (9)

O Damsels with lightning like thin waist, reddish lips and pearl like white teeth! Our Lord had by His mercy redeemed me and made me a devotee to His anklets worn feet, which act was similar to peeling fibres from a stone. Let us sing to His glory by calling Him ‘Thenna’ (the Ruler of the Southern land) and play Thellenum.

கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.                       (10)

My Lord’s anklets worn feet cannot be seen by the celestials even in their dreams. But He appeared in person along with His consort whose shoulders glisten like bamboo which are adorned with ornaments and enslaved me. Let us appreciate this kindness with tears in our spear shaped eyes and play Thellenum.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண் டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                        (11)

My Lord shares His body with His consort whose eyes are more beautiful than the kayal fish. When He joined with me and enslaved me, my distance from Him was removed. My relationships formed as a result of my past sins, my attachment to this world, my meaningless chatter, my selfish acts all ceased. Let us play Thellenum to celebrate it.

முத்திக்கு உழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                               (12)

While many sages strived and suffered to attain bliss, He offered His grace to an elephant called Aththi. Similarly He blessed me and enslaved me. He is the Light Supreme who immersed me in the sea of devotion. Let us play Thellenum to celebrate His sweetness.

பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                               (13)

He redeemed me and enslaved me so that I will not be among those on this earth, in heaven, the hell or anywhere else. Let us sing to His such mercy. Let us also sing to the greatness of the unique one who is beyond imagination and play Thellenum.

மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தாற்
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.                            (14)

He is beyond understanding even by Thirumal, Brahma, other heavenly gods or scriptures. He came to me as a simple person and entered my soul and melted my heart and thus enslaved me. Let us sing to His mercies with tears in our fish-shaped eyes and play Thellenum.

உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                              (15)

He is like a large sea of mercy which gives pleasure when we receive it. So let us grasp that which causes our heart to melt and swell and make the soul become cool. Let us devotees think of the anklets worn feet of the Lord of the southern land and sing His praises and play Thellenum.

புத்தன் புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ.                                       (16)
He is the unique one and the manic one (Piththan) who is worshipped by Indran, Vishnu, Thirumal and other heavenly beings. The one who dwells in Perunthurai, the one who severs the cycle of birth, the one who dances in Thillai. Let us place His graceful feet in our heart and play Thellenum.

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க் கிடந்து தடுமாறுங்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                            (17)

I was confused being immersed in a sea of false philosophies and phony religions. He offered me both His anklets worn feet and saved me from my grief and muddle. Let us sing to that merciful deed and play Thellenum.

வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல் நீர் மண்கெடினுந்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.                           (18)

Even if the sky, the wind, the fire, the water and the earth comes to an end, My Lord will have no end or weariness. It is to Him that I have surrendered my body, my soul, my feelings, my thoughts and my ego. Let us sing to Him and play Thellenum.

விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாஎன்று தெள்ளேணங் கொட்டாமோ.                         (19)

He is the supreme source to the heavenly beings, seeds to those in hell, an elixir to those on this earth, savings deposit to Vishnu and Thirumal. He came before us for our eyes to feast on Him. Let us sing to His merciful feet by calling Him ‘Thenna, Thenna’ and play Thellenum.

குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.                               (20)

Let us sing to His greatness, to the heron’s feather that adorns His head, to the well-being of the mother goddess who wears bangles made of shell, to the swallowing of the venom to save others, to the dancer who is dancing daily in the stage at Thillai that has a rich source of water and play Thellenum.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s