02. கீர்த்தித் திரு அகவல் – Keerthith thiruahaval

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்.                      (5)

He is our Lord who has the feet which danced in the ancient city of Thillai. He is the one who lives in the hearts of all living things. He has countless virtues. He is glorious. He creates or destroys the various art forms on earth, in sky and in the celestial world.

என்னுடை இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்.                   (8)

He has chased away the darkness of ignorance from me and has made as His dwelling the hearts of those devotees who are full of love for Him.

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்.                                 (12)

He produced the Agamas (scriptures) on the majestic Mahendra hill and preached it to the whole world. He had pleasure appearing with His consort in Kalladam.

பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்                                (16)

He appeared in Panchapalli along with Parvathy whose words are sweet like milk. He bestowed his grace in abundance there. He appeared as a hunter and left his mark among the bosoms of the goddess who has crimson coloured lips.

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும்                    (20)

Appearing as a fisherman, He caught a large fish and retrieved the Agamas hidden in its stomach. Then he preached those Agamas from the Mahendra mountain with his five faces to the sages.

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி                                  (24)

He appeared in Nanthambadi as a preacher of Vedhas remaining as one who had overcome death. He took numerous forms and numerous characters and became part of countless lives.

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக்
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்                          (28)

The one who has a bull as his mount arrived with his consort who had taken up half his body, to uplift this earth and to bestow blessings to his devotees. He also offered himself as a trainer for the horses obtained from countries west.

வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்                                   (32)

In Velam Puththoor He alighted from His mount and showed his glorious body for everyone to see. He also appeared on a mirror so that a hunter from Santham Puththoor could see him.

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்                                    (36)

In Mokkaneeswaram, He appeared before his devotees showing his reddish body that was glowing like fire.  He let Vishnu and Brahma to find that He had no beginning or end. He is the one who turned foxes into horses.

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்                                 (41)

In order to bestow His grace to Pandian King, He refused to accept the gold offered in return for the horses He sold to the king. He appeared as a glowing fire in order to make him his devotee.

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்                                  (45)

He took me as His devotee by appearing as a Brahmin and showed me His miracles. He  stayed in the great city of Madurai and became a horse-groom.

ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்                                                (49)

And there He did manual work for His devotee and carried soil on his head for wages. He appeared in Uththarakosamangai and showed his superior skills.

பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்                                              (53)

He appeared in Poovanam with all his glory and showed his spotless body. He indicated his presence in Vaathavoor by making tinkling noises with His anklets.

திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கருவார் சோதியில் கரந்த கள்ளமும்
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்                                                    (57)

He tricked me by merging into a glow after appearing as the deity of Perunthurai. He appeared in Poovalam and offered His grace to devotees to rid them of their sins.

தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்                                    (61)

He helped to put up a water booth and also served water to the soldiers to help King Pandian in a war. He came to Thiru Venkaadu as a guest and stayed under a Kurunthu tree.

பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த கள்ளமும்                                             (65)

He, enthroned himself in a place called Paddamangai and blessed his devotees with eight mystic powers. He then took the form of a hunter and mysteriously hid himself in the forest.

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளிப்
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்                                                (69)

He changed His appearance in the forest and took the form of a nobleman. He then appeared before His devotees in Oriyoor as a baby.

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவர் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்                                     (74)

He appeared in Pandoor and stayed there for His devotees. He took majestic features in the beautiful Island south of Devoor. He imparted wisdom to the sages in Thiruvathavoor, which is full of groves dripping with honey.

இடைமருது அதனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்                                        (78)

He stayed in Idaimaruthu and offered His feet to the devotees for their salvation. He showed up in Ehambam as a natural event. He took Goddess Umaiyal as part of himself.

திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்                                             (82)

He stayed in Vanchiyam in glory and enjoyed it with His consort whose locks of hair smell sweet. He became a soldier in the king’s army and took many forms and showed many skills with his bow.

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்                           (86)

He dwelt in Kadampoor in a spacious place, showed His beauty in mount Eengkoy, showed himself to be a Saivite preacher in Thiruvaiyaaru and stayed in Thuritti willingly.

திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்                                       (91)

He stayed willingly in Thiruppanai, and showed His presence in Kalumalam (Seerkazhi) and appeared in Kazhukkunru. He bestowed His grace in Purampayam and appeared in Kuttralam as Sivalingam.

அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத்
தானே ஆகிய தயாபரன் எம் இறை                                            (96)

Our Lord, concealed the endless greatness of his form of fire and took the beautiful form of the prime God and bestowed His grace like magic. Our Lord absorbed the different nature of others and remained Himself as the supreme God.

சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்                   (99)

Appeared as a teacher in a place called Chandra Theepam. Descended from above and remained in His beautiful form in the desert.

மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்                                                (102)

The dweller of Mahendra mountain mentioned in the Agamas, the One with unceasing glory, One who bestows grace to his devotees. I shall describe how He enslaved me

ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்                           (107)

He is powerful, beautiful which is enhanced by the vibhoodhi He wears. He bestowed His grace which flows like a river that removed all my faults. His appearance with His consort forming part of Him was His kind form.

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏறு உடைத்தாக எழில்பெற அணிந்தும்                                     (114)

With the sound of the drum in His hands, He removes impure thoughts from the minds of His devotees. He bestows grace with the three pronged spear (Soolam) held in His hands. The glowing light radiating from His pure form severs the three bonds that bind the soul to this earth. He wears the garland made of Kaluneer and shows love towards His devotees.

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்                       (119)

He is endless as found by Hari and Brahma in their search. He had mastered the art of horse-riding. He shows the means not to be born again. He hails from Pandinadu and redeems His pious devotees.

உத்தர கோச மங்கை ஊர் ஆகவும்
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்                                 (124)

He has made Utharakosamangai as his dwelling place. He bestowed grace on the Primary Moorthys, bears the name Devadevan, acts as the vehicle to dispel darkness, the mountain giving grace.

எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும்
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி                                              (129)

Whatever abilities or qualities one has, He brings them within His benevolence. Invited me, who is unworthy like a dog to come to His court in benevolent Thillai. He then left me to stay there.

அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதர் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி                                     (135)

Those devotees who were present were granted grace and were blessed to merge with Him. Those who were not present were confused and entered fire. They wailed rolling on the ground or ran and immersed themselves in the sea.

நாத நாத என்று அழுது அரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்                      (141)

They then recovered and cried, “Oh my Lord! My Lord!” and reached for His feet and attained salvation. They yearned to see the dance He performed for Pathamsali Muni. He then danced in Puliyoor re-enacting the dance He performed on Kailai mountain.

கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப்புக்கு இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே                                      (146)

The Lord of the Kailai mountain that resounds with prayers, entered Puliyoor and gave His blessings with His smiling face to Kali and Umaiyal who has sweet red lips. He blessed Puliyoor and granted salvation to His devotees who followed Him.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s